கனரா வங்கியின் கோவை பிராந்திய அலுவலகம்-I சார்பில் பெரு நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் கொரோனா தொற்று நிவாரணமாக ஏழைகள் சுமார் 1000 பேருக்கு உணவு பொட்டலங்கள் பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், அரசு மருத்துவமனை, உக்கடம், காந்திபுரம், ஆறுமுககவுண்டனூர் பகுதிகளில் வழங்கப்பட்டது. அவற்றை வங்கியின் துணை பொது மேலாளர் என்.ஸ்ரீநிவாச ராவ் தொடங்கி வைத்தார். அருகில் உதவி பொது மேலாளர்கள் டி.ரமேஷ், எச்.ஜி.ரமேஷ், மேலாளர் டி.எழிலரசன், மார்க்கெட்டிங் மேலாளர் ஜெ.ஆண்டனி பிரிட்டோ ஆகியோர் உள்ளனர்.