fbpx
Homeபிற செய்திகள்இணைய வழியில் தென்னையில் பயிர் மேலாண்மை பயிற்சி

இணைய வழியில் தென்னையில் பயிர் மேலாண்மை பயிற்சி

தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பின் கீழ் மதுரை மேற்கு வட்டார வேளாண் மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட் டத்தில் இணைய வழியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடை பெற்றது.

இப்பயிற்சியில் மதுரை மாவட்டத்தின் 7 வட் டாரங்களில் உள்ள 40 விவசாயிகளுக்கு இணை யவழியில் பயிற்சி தொடங் கியது.
மதுரை மேற்கு வட்டார ஒருங்கிணைப் பாளர் கமலா லட்சுமி வரவேற்றுப்பேசி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்ட திட்ட இயக்குனர் /வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் தென்னை யின் சிறப்பம்சங்கள் மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
துணை வேளாண்மை இயக்குனர் அமுதன், தென்னையின் பூச்சி நோய் நிர்வாகம் மருத்துவ குணம் மற்றும் டிம்பர் வால்யூ மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்யும் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

அதனைத் தொடர்ந்து செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர் குருசாமி அவர்கள் தொழில்நுட்ப கருத்துக் களை வழங்கினார். தென்னை ரகங்கள் நடவு முறை உரமேலாண்மை பூச்சி நோய் நிர்வாகம் ஊடு பயிர் மேலாண்மை குரும்பை உதிர்தலின் காரணிகள் நீர் உபயோகம் மகசூல் விபரங்கள் ஆகிய தலைப்புகளில் விவரித்தார்.

தென்னை விவசாயிகளின் பல்வேறு வகையான கருத்துக்களுக்கு விரிவாக விளக்கம் அளித்து பயிற்சிகள் வழங்கினார். இணையவழி பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜசேகர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img