fbpx
Homeபிற செய்திகள்உண்டியல் சேமிப்பு பணத்தை கொரோனா நிதிக்கு அனுப்பிய சிறுமி மடிக்கணினி வழங்கி முதல்வர் பாராட்டு

உண்டியல் சேமிப்பு பணத்தை கொரோனா நிதிக்கு அனுப்பிய சிறுமி மடிக்கணினி வழங்கி முதல்வர் பாராட்டு

விழுப்புரத்தில் உண்டியல் பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்கு அனுப்பிய சிறுமியை பாராட்டி முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் மடிக்கணினி வாங்கி கொடுக்கப்பட்டது


விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கதனேசன், தமிழ்ச்செல்வி இவர்களின் குழந்தை 10 வயது சிறுமி சிந்துஜா அதே ஊரில் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிந்துஜா ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 500 ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை உண்டியலில் சேமித்து வைத்திருந்தார். மொத்தம் ரூபாய் 1,617 ரூபாயை முதல்வர் கொரோனா நிதிக்கு காசோலை மூலம் அனுப்பி வைத்தார்.


இந்நிலையில் இந்த செய்தி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்தது. இந்நிலையில் சிறுமியின் நெகிழ்ச்சியை பாராட்டும் வகையில் இன்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் விழுப்புரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் ஆகியோர் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அனுப்பிய பாராட்டுச் சான்றிதழை அந்த சிறுமியிடம் வழங்கினர்.


இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் அந்த சிறுமிக்கு மடிக்கணினி வாங்கி கொடுத்து சிறுமியின் ஆசையை நிறைவேற்றினார். அதாவது இந்த சிறுமி மடிக்கணினி வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் என்பதால் சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த மடிக்கணினி வாங்கி கொடுக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img