fbpx
Homeபிற செய்திகள்ஐசிஐசிஐ வங்கியில் நேரடி மனித தொடர்பில்லாத வங்கி தள சேவை அறிமுகம்

ஐசிஐசிஐ வங்கியில் நேரடி மனித தொடர்பில்லாத வங்கி தள சேவை அறிமுகம்

சில்லறை வணிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாட்டின் மிக விரிவான டிஜிட்டல் வங்கி சேவைகளின் தொகுப்பாக மெர்ச்சண்ட் ஸ்டேக் வணிக அடுக்கு என்கிற தளத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தொடங்கியுள்ளது.

டிஜிட்டல் வங்கி சேவை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் இதன் மூலம் கிடைக்கும்.
மளிகை, சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய சில்லறை விற்பனைக் கடை சங்கிலிக் கட்டமைப்புகள், ஆன்லைன் வணிகங்கள் மற்றும் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை தங்கள் வங்கித் தேவைகளை இந்த கோவிட் தொற்றுநோய்க் காலத்திலும் தடையின்றி பூர்த்தி செய்ய இது உதவுகிறது.

நேரடி மனித தொடர்பில்லாமல் சில்லறை வணிகர்கள் இந்த சேவைகளைப் பெற முடியும். வணிகங்களுக்கான ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் வங்கிச் செயலியான இன்ஸ்டா பிஸ் – ஸில் இந்த வசதிகளை அவர்கள் உடனடியாகப் பெறலாம்.

சில்லறை விற்பனைச் சூழல் அமைப்பிற்குத் தேவையான அனைத் தையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் வங்கி தீர்வுகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் தொகுப்பை மெர்ச்சண்ட் ஸ்டேக் வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img