கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஒய்ஐ யுவா கிளப் (சீமி சீஹிக்ஷிகி நீறீuதீ) மற்றும் கோயம்புத்தூர் ஒய்ஐ யுவா கிளப் இணைந்து “குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி”-யை வ.உ.சி. மைதானத்தில் நடத்தியது.
கல்லூரி முதல்வர் முனைவர் செ. பாலுசாமி, செயலர் மற்றும் ஆலோசகர் எஸ். ராமசந்திரன் ஆகியோர் இந்நிகழ்வினை முன்னெடுக்க ஊக்கமளித்தனர். இப்பேரணி, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றம் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜி.எஸ். சமீரன்
இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜி.எஸ். சமீரன் துவக்கி வைத்து பேசும்போது, குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை எடுத்துரைத்தார்.
இப்பேரணியை ஒய்ஐ யுவா கிளப் ஒருங்கிணைப்பாளர் சிஎஃப்ஆர்டி தலைவர் முனைவர் எஸ்.பி. ஸ்ரீகலா, வணிகவியல் (CA) துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் ஆர். நித்யா மற்றும் வணிகவியல் (BI) துறை உதவிப்பேராசிரியர் ஸ்டேஃபி கிரேஸ் ஆகியோர் ஒருங்கிணைத் தனர். இப்பேரணியில் கல்லூரி மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.