fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். பொறியியல் மாணவருக்கு துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம்

கே.பி.ஆர். பொறியியல் மாணவருக்கு துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் மருத்துவப் பிரிவான 6TN Med Coy-யை சார்ந்த மாணவர் அபினேஷ் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மண்டல அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

கோவையில் மண்டல அளவிலான குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கி சுடுதல் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், கோவை மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இருந்து சுமார் 150 மாணவர்கள் பங்கு பெற்றனர்.

இதில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி யின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் என்.சி.சி. மருத்துவ பிரிவின் மாணவர் அபினேஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் மாநில அளவில் நடைபெறும் என்.சி.சி. மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.

இதில் வெற்றி பெற்று, பின் இறுதியில் தேசிய அளவில் நடைபெறும் அகில இந்திய ஜி.வி. மவ்லாங்கர் சாம்பியன்ஷிப் (All India GV Mavlankar Shooting Championship) எனும் போட்டியில் பங்கு பெற முடியும்.

கல்லூரியின் என்.சி.சி. அளித்த தொடர் பயிற்சி, துப்பாக்கி சுடுதலில் உள்ள நுட்பங்கள் கற்றுக் கொடுத்து ஊக் கப்படுத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற எனக்கு பெரிதும் உதவியது என்றார் மாணவர் அபினேஷ்.

கல்லூரி தலைவர் டாக்டர் கே.பி.ராம சாமி, முதல்வர் முனைவர் மு.அகிலா ஆகியோர் மாணவரைப் பாராட்டினர். முதல்வர் முனைவர் மு.அகிலா கூறுகையில், மாணவனின் கடின பயிற்சி, விடாமுயற்சி, உழைப்பு ஆகியவையே மாணவனின் வெற்றிக்கு உதவியது.

கல்லூரியில் வழங்கப்படும் முறையான பயிற்சி மற்றும் மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்கள் ஊக்குவிப்பதன் மூலம் மேலும் அடுத்து அடுத்து நடைபெறும் பல்வேறு போட்டிகளில் அதிகப்படியான மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற கல்லூரி பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img