சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை வழங்கினார்.
தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டானினை முதல்முறையாக சந்தித்த ரஜினிகாந்த், முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,
கொரோனா வைத் தடுக்கும் விதமாக அரசு எடுக்கும் நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார்.
மேலும், வெளியில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டார்.