மேட்டுப்பாளையம்,
காரமடை தேக்கம்பட்டி காகித தொழிற்சாலையான ஐ.டி.சி நிறுவனம் சார்பில் கொரோனா மையங்களுக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொரோனா தடுப்பு உபரணங்களை ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி காரமடை ஊராட்சி ஒன்றிய பிளிச்சி ஊராட்சியில் அமைந்துள்ள காருண்யா கொரோனா மையத்திற்கும் கார மடை வித்திய விகாஸ் பள்ளி கொரோனா மையத்திற்கும் கொரோனா கவச உடைகள்.
என்95 முககவசங்கள், கையுறைகள், கிருமி நாசினி திரவம், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள், கட்டில்கள், போர்வைகள் என ரூ.3 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை ஐ டி சி தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், மருத்துவர் ராதா மணி, கண்ணன் ஆகியோரிடம் வழங்கி னார்.
அப்போது நிறுவன மேலாளர் வீரமணி, விஜயகுமார், பிளிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி ராஜன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர்கள் விஜய், விக்னேஷ், செவிலியர்கள் ரீனா, உமா மகேஸ்வரி, மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.