fbpx
Homeபிற செய்திகள்கோவிலில், பிறந்து 10 நாளே ஆன குழந்தையை கட்டைப் பையில் வைத்துச்சென்ற தாய் எங்கே? கோவையில்...

கோவிலில், பிறந்து 10 நாளே ஆன குழந்தையை கட்டைப் பையில் வைத்துச்சென்ற தாய் எங்கே? கோவையில் பரபரப்பு

கோவையில் கட்டைப் பையில் வைத்து கோவிலில் வைக்கப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மீட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள துரைசாமி நகரில், ராஜ கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில், பிறந்து சில தினங்களே ஆன குழந்தை, கட்டைப்பையில் வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிக ளுக்கும் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பீளமேடு காவல் துறையின ரும், சுகாதார ஆய்வாளர் ராமகி ருஷ்ணனும் கோவிலுக்கு சென்று குழந்தையை மீட்டனர்.

இதனையடுத்து, உடன டியாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில், அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையை பையில் வைத்து விட் டுச் சென்றவர்கள் யார்..? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அந்த பகுதி யில் உள்ள சிசிடிவிகாட்சி களை காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை, கட்டைப்பையில் வைக்கப் பட்டு கோவிலில் விட்டுச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img