fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் கட்டாயம் அணிய வலியுறுத்தி வாகன பேரணி நடைபெற்றது.

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், போக்குவரத்து துறையின் சார்பில் நேற்று 35-வது சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.

இதில் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், மஞ்சப்பைகளையும் வழங்கினார்.

இப்பேரணியானது, பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி, அரசு மகளிர் பாலிடெக்னிக் வழியாக வ.உ.சி மைதானத்தை அடைந்தது.

இதில், 200க்கு மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் துணை காவல் ஆணையர் (போக்குவரத்து) ராசராசன், இணை போக்குவரத்து ஆணையர் சிவகுமரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிவகுருநாதன்(வடக்கு), ஆனந்த்(மேற்கு), பாலமுருகன்(தெற்கு), சத்தியகுமார்(மத்தியம்) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img