கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவையில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே, ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடடினர்.
இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான், பக்ரீத் முக்கிய பண்டிகைகளாக கொண் டாடப்படுகிறது.
இதில், ஆண்டின் மற்ற மாதங்களைக் விட, ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாத மாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். இந்த மாதம் இறைவனை நெருங்கவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப் படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் கருது கின்றனர்.
இதையொட்டி, ஒரு மாதம் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோவை சாயிபாபாகாலனிபகுதியில் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபீக் சார்பில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப் பாடு காரணமாக, காலை யிலேயே அவரவர் தங்களது வீடுகளிலேயே தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகவசம் அணிந்தபடி தொழுகையில் ஈடுபட்டனர்.
சிலர், வீட்டின் வாசலிலும்,மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.