fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட பேச்சுப் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

கோவை மாவட்ட பேச்சுப் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை யின் மூலம் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (அக்.12) கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.

போட்டிகளை, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அ.புவனேசுவரி தொடங்கி வைத்து பேசினார். பள்ளி அளவில் 4 தலைப்புகளின் கீழும், கல்லூரி அளவில் 5 தலைப்புகளின் கீழும் நடைபெற்ற இப்பேச்சுப் போட்டியில், 44 பள்ளி மாணவர்களும், 14 கல்லூரி மாண வர்களும் பங்கேற்றனர்.

பள்ளிப் போட்டிக்கு நடுவர்களாக கோவை, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஹென்றி சாமுவேல், செயின்ட் மிக்கேல் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் அருள் ஜஸ்டின் திரவிய ஜெயா, கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஆர்.செயலட்சுமி ஆகியோர் செயல்பட்டனர்.

கோவை, வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு உயிரி -கணிதம் பயிலும் மாணவி க.காயத்ரி முதல் பரிசையும், பீளமேடு, பூ.சா.கோ.அர.கிருட்டிணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு அறிவியல் -கணினி அறிவியல் மாணவி அபினேஸ்வரி 2-ம் பரிசையும், இராஜவீதி கோவை துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு உயிரி-கணிதம் மாணவி அ.அப்சா 3-ம் பரிசையும் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசினை கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு உயிரி-கணிதம் மாணவி வெ.தங்கதர்சினி, ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி நா.சூரியமாநிகி ஆகியோர் பெற்றனர்.

கல்லூரிப் போட்டிக்கு நடுவர்களாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) முனைவர் இரா.மணிமேகலை, பெ.நா.பாளையம், ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா.கோகுல், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ.மணிவண்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணா கலைக் கல்லூரி: கோவை, ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இளங்கலை உளவியல்- 2-ம் ஆண்டு மாணவி ந.மகிதா முதல் பரிசையும், அரசு சட்டக் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவி கு.சுமத்ரா 2-ம் பரிசையும், புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை கணிதம் முதலாமாண்டு மாணவி இரா.ஐஸ்வர்யா 3-ம் பரிசையும் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img