fbpx
Homeபிற செய்திகள்திருச்செந்தூர் வட்டத்தில் ரூ.10.90 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்செந்தூர் வட்டத்தில் ரூ.10.90 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் நட்டாத்தி ஊராட்சிக்கு உட்பட்ட முள் ளன்விளை, குமாரபுரம், பட்டான்டி வினை ஆகிய பகுதிகளில் ரூ.10.90 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சி முள்ளன்விளையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு தற்போது இணைய வழி வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன. மாணவிகளிடம் நடத்தப்படும் வகுப்புகள் குறித்து கேட்டறிந்தேன். சிறப்பான முறையில் வகுப்புகளை நடத்திச்செல்ல ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அங்கன்வாடி மையத்தின் அருகில் உள்ள மகளிர் சுய உதவிக் கட்டிடத்தினை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, துறை சார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குமாரபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.90 இலட்சம் மதிப்பில் மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டுள் ளது. மண் புழு உரம் தயாரிக்கும் முறையினை ஆய்வு செய்து, இங்கு தயாரிக்கப்படும் மண் புழு உரத்தினை ஊராட்சி மன்றம் வாயிலாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய, ஊராட்சி மன்றத் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டான்டிவினை கிரா மத்தில் உள்ள சுகாதார நிலையத் தில் கழிவு நீர் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள காய்கறித் தோட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு அரிய வகை மூலிகைச் செடிகள், கீரைகள், பாரம்பரிய பழ வகைகள் உற்பத்தி செய்திட ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்வி.பி.எஸ்.செல்வமணி நகர் பகுதியில் நட்டாத்தி ஊராட்சி மன்ற சமுதாய நலக் கூடம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகளை தரம் பிரிக்கும் பணி நடக்கிறது.

இதன் வாயிலாக கிடைக்கப்பெறும் ஊதியம் குறித்து மகளிரிடம் கேட்டோம். நெகிழி கழிவுகளை மறுசுழற்சி செய்து வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டன.

நட்டாத்தி பகுதி சாலை யோரங்களில் மழைக் காலங்களில் தேங்கும் மழை நீரினை நிலத்தடி நீராக மாற்றுவதற்கு மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு அகழி வெட்டும் பணி நடக்கிறது.

இப்பணியை பார்வையிட்டு, மழைக் காலத்திற்கு முன்னதாக பணிகளை முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ஆய்வின்போது, திருவைகுண் டம் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் சுரேஷ் (வ.வ)., ஆண்டோ (கி.ஊ.), மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சுகந்தி பாலின், ஒன்றிய பொறியாளர் முத்து, நட்டாத்தி ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகலா, உதவி பொறியாளர் பிரேம்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img