அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் புதிதாக 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருகிறது. உடனடியாக குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள 252 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் 15.வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னார் வலர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கை கொண்ட கோவிட் கேர் சென்டரை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல் வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. திருப் பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் தேவை அதிக ரித்து வருவதால் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப் பட்டு வருகிறது.
குமரன் கல்லூரியில் அமைக் கப்பட்டு உள்ள 252 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிசன் கொள்கலன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த மையத்தை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.