fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாநகராட்சி பசுமை நகர திட்டத்தில் மரம் நடும் விழா

திருப்பூர் மாநகராட்சி பசுமை நகர திட்டத்தில் மரம் நடும் விழா

திருப்பூர் மாநகராட்சியின் பசுமை நகர திட்டத்தின் கீழ் வார்டு எண் 4 சமத்துவபுரம் பகுதியில் மியா வாக்கி முறையில் அடர்வனக்காடுகள் அமைக்கும் பணியானது மேயர் அறிவுறுத்தலின்படி ஈக்கோ ப்ரொடக்க்ஷன் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் சமுதாய சேவை பதிவேடு அடிப்படையில் செய்து முடிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் வார்டு எண் நான்கு சமத்துவபுரம் பகுதியில் ஏறத்தாழ 12,500 சதுர அடி நிலமானது கம்பி வேலி அமைக்கப்பட்டு அடர் வனத்திற்காக தயார் செய்யப் பட்டது. 350 மரக் கன்றுகள் நடப்பட்டு நிரந்தர சொட்டுநீர் பாசன வசதிகள் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தினேஷ் குமார், ஆணையாளர் கிராந்தி பாடி, இரண்டாம் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மரம் நடும் விழாவை தொடர்ந்து அந்நிறுவனத்தினரால் அருகில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் மரம் நடும் விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

முன்னதாக பள்ளியில் நடத்தப்பட்ட மரம் நடும் விழா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மேயரும் ஆணையாளரும் பரிசுகளை வழங்கி விழாவை முடித்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சி முடிந்ததும் தினேஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகவும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற உதவிய ஈக்கோ ப்ரொடக்க்ஷன் இன்ஜினியர்ஸ் திட்ட மேலாளர்கள் சுந்தர் பாபு கருப்பஞ்செட்டி லீ மற்றும் ஈக்கோ ப்ரொடக்க்ஷன் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img