fbpx
Homeபிற செய்திகள்தேசிய தடகள போட்டியில் கோவை மாணவிக்கு தங்கம்

தேசிய தடகள போட்டியில் கோவை மாணவிக்கு தங்கம்

சட்டிஸ்கர் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான தடகளப்போட்டியில், கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவி, இரண்டு பதக்கங்கள் வென்றார்.

அதலெடிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், ‘2வது தேசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப்போட்டி’ சட்டிஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங் கனைகள் போட்டியிட்டனர்.

100மீ., 200மீ., 400மீ,. ஓட்டம், நடையோட்டம், தடையோட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

பீளமேடு பி.எஸ்.ஜி. ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் ஒலிம்பா ஸ்டெபி போட்டியிட்டார்.

இதில், அவர் 400மீ., ஓட்டத்தில், 55.90 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக் கம் வென்றார். இதேபோல், 400மீ., தடையோட்டத்தில், 1.01.17 நிமிடங்களில் இலக்கை கடந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஒடிசாவை சேர்ந்த பிரக்யான் பிரசாந்த் சாகு 1.00.28 நிமிடங்களில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற மாணவி ஒலிம்பா ஸ்டெபியை கல்லூரி உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img