fbpx
Homeபிற செய்திகள்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும் திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: கோவை உள்பட 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றும் திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னணியில் இருக்கிறது. அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றும் நிலையில் உள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்படு கிறது. காலை 10 மணி முதல் முடிவு தெரியவரும். வாக்கு எண்ணப்படும் இடங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த சனிக் கிழமை (19ம் தேதி) தேர்தல் நடந்தது.

12,870 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 57,746 பேர் போட் டியிட்டனர். மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம், அரியலூ ரில் 75.69 சதவீதம், கட லூரில் 71.53 சதவீதம், திண்டுக்கல் 70.65 சதவீதம், ஈரோடு 70.73 சதவீதம், கள்ளக்குறிச்சி 74.36 சதவீதம், கரூர் 76.34 சத வீதம், நாமக்கல் 71.66 சத வீதம், ராணிப்பேட்டை 72.24 சதவீதம், சேலம் 70.54 சதவீதம், தென் காசி 70.40 சதவீதம், திருவண் ணாமலை 73.46 சதவீதம், விழுப்புரம் மாவட்டத்தில் 72.39 சதவீதம் வாக்குகள் பதிவானது.

குறைந்த பட்சமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த தேர்தல் எந்தவித அசம் பாவித சம்பவங்களும் நடை பெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்குப்பதிவு முடிந் தவுடன் தேர்தலில் போட்டியிடும் அந்தந்த கட்சிக ளின் சார்பில் நியமிக்கப்பட்ட வாக் குப்பதிவு முகவர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னி லையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

268 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வெப் கேமரா மூலம் 24 மணி நேர மும் போலீசார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வாக்கு எண்ணும் மையங்களின் உள் மற்றும் வெளிப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் 30 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 15 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.

அதன் பின்னர் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வைக்கப் பட்ட சீல் அகற்றப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை வந்துள்ள முடிவுகளின்படி திமுக அணி மிகப்பெரிய அளவில் முன்னிலை வகிக்கின்றன.

அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே வெற்றியை பதிவு செய்து வருகின்றன

தமிழக நகர்புற உள் ளாட்சித் தேர்தலில் இதுவ ரையிலான முடிவுகளின் படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் திமுக 21 இடங்களிலும் முன்னிலையில் இருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் திமுக 121 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் உள்ளது. பாமக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் திமுக 323 இடங்களிலும், அதிமுக 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img