fbpx
Homeபிற செய்திகள்பாலக்கோடு நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமையும் இடம் - கலெக்டர் ஆய்வு

பாலக்கோடு நகரில் பொழுதுபோக்கு பூங்கா அமையும் இடம் – கலெக்டர் ஆய்வு

கோடு பேரூராட்சி நகர பகுதியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நகரத்தை சுற்றியும் அரசு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்கி வரு கிறது.

நாளடைவில் வளர்ச்சி அடைந்து வரும் பேரூராட்சியில் பொது மக்களின் பொழுது போக்கிற்காக எந்த ஒரு இடமும் இல்லாததாலும் இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் ஆகியோர் நகரத்தில் போதிய நடைப்பயிற்சி கூடங்கள் இல்லாததால் நெடுஞ்சாலை ஓரங்களில் காலை மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொண்டு வரு கின்றனர்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது எதிர்பாராதவிதமாக விபத் துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத் தில் திடீர் ஆய்வு மேற் கொண்ட மாவட்ட ஆட்சி யர் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்து நடந்து கொண்டிருக்கும் திட்ட பணிகள் குறித்து கேட்ட றிந்தார்.

இதையடுத்து பொது மக்களின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் பாலக்கோடு நகரில் புதிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் பூங்கா இடத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர் ஷினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பூங்கா அமைய கூடிய இடம் மத்திய ரயில்வே துறைக்கு சொந்தமானது என்பதால் மத்திய அரசிடம் கடிதம் பெற்று உடனடியாக அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் சிறிய வர்கள் பெரியவர்கள் முதி யவர்கள் இளைஞர்கள் என அனைவருக்கும் ஏற் றார்போல் நடைபயிற்சி மேற்கொள்ளவும் குழந்தை கள் விளையாட ஏதுவாக சிறு சிறு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பேரூராட்சி தலைவர் பி கே முரளி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் அதி காரிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img