fbpx
Homeபிற செய்திகள்மத்தூரில் இலவச பொது மருத்துவ முகாம்

மத்தூரில் இலவச பொது மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனை, மாடப்பள்ளி டாக்டர் மூர்த்திஸ் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை கிரீன் கிராஸ் டிரஸ்ட் இணைந்து மாபெரும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தியது.

இரத்த அழுத்தம், இரத்த சக்கரை அளவு, உடல் பருமன் அளவு, இருதய, நுரையீரல், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, எலும்பு மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிக்கிச்சை, வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

ஒற்றைத் தலைவலி, தொடர்ச்சியான தலைவலி, கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், கண்ணில் சதை வளர்ச்சி, கண்ணில் புரை நீக்குதல் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் குறைபாடுகள் தொடர்பாக கண் பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங் கப்பட்டன. இதில் சுமார் 200 பேர் பயன் பெற்றனர்.

எஸ்கேஎஸ் மருத்துவமனையினர், டாக்டர் மூர்த்திஸ் கண் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் பிரதிப்சிங்ளி, கிரீன் கிராஸ் டிரஸ்ட் தலைவர் எல்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img