19.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மஹிந்த்ரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா நிறுவனத்தின் பண்ணை உபகரணத் துறை, கோவிட் 19 பரவும் இந்த காலக்கட்டத்தில் இந்திய விவசா யிகளுக்கு உதவும் வகையில் தங்கள் வாடிக்கையாளர்களின் நலனை மையமாக கொண்ட எம்-ப்ரொடெக்ட் கோவிட் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம், புதிய மஹிந்த்ரா டிராக்டர் வாடிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கோவிட்-19 பாதிப்பிலிருந்து பாது காப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மஹிந்த்ரா தனது வாடிக்கையாளர் களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான சுகாதார காப்பீடு, பிரத்யேகமான கோவிட் மெடிக்ளெய்ம் பாலிசியின் மூலம் வழங்கப்படும்.
இந்த காப்பீடு வாடிக்கையாளர்கள் கோவிட்-19 தொற் றினால் பாதிக்கப்பட்டால், வீட்டில் தனிமைப்படுத்துதலின் பலன்களுடன் கூடிய காப்பீட்டை அளிக்கும். வாடிக்கையாளர் எதிர்பாராதவிதமாக உயிர் இழக்க நேரிட்டால், மஹிந்த்ரா லோன் சுரக்ஷா கீழ் வாடிக்கையாளர்களின் கடன் காப் பீடு செய்யப்படும். எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டம், மே 2021-ல் வாங்கிய மஹிந்த்ராவின் அனைத்து வகை ட்ராக் டர்களுக்கும் கிடைக்கும்.
எம் அண்டு எம் நிறுவனத்தின் பண்ணை உபகரணத் துறைத் தலைவர் ஹேமந்த் சிக்கா இத்திட்டம் குறித்து கூறுகையில், புதிய எம்-ப்ரொடெக்ட் கோவிட் பிளான், விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்ட, அவர்க ளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு புதிய முயற்சியாகும். எம்-ப்ரொடெக்ட் மூலம் நம்முடைய விவசாயிகள் ஆரோக்கிய மான வாழ்க்கையை தொடர்வார்கள் என்று நம்புகிறோம். என்றார்.
எம் அண்டு எம் லிமிடெட் பண்ணை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சுபப்ரதா சஹா கூறுகையில், விவசாயி வாடிக்கையாளர்களுக்கு மகத்தான ஆதரவை நல்கிவரும் எங்களது செயல்பாட்டு பங்குதாரர்கள் அனைவருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.