fbpx
Homeபிற செய்திகள்அப்ஸ்டாக்ஸ் புதிய பிரச்சார வீடியோ வெளியீடு

அப்ஸ்டாக்ஸ் புதிய பிரச்சார வீடியோ வெளியீடு

இந்தியாவின் மிகப்பெரிய முத லீட்டுத் தளங்களில் ஒன்றான அப்ஸ்டாக்ஸ் (ஆர்கேஎஸ்வி செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்றும் அழைக்கப்படுகிறது), தனது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 பிரச்ச £ரமான ‘ஓன் யுவர் ஃப்யூச்சர்’ ஐ அறிமுகப்படுத்தியது.

இந்தத் தொடரின் முதல் இரண்டு வீடியோக்கள் டாடா ஐபிஎல் 2022 ன் தொடக்கத்துடன் வெளியிடப்பட்டன. ஒரு வீடியோ மூன்று நண்பர்கள் மீண்டும் இணைவதைக் காட்டுகிறது.

அங்கு அவர்கள் தங்கள் தொழில் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கின்றனர். மற்றொரு வீடி யோ, நண்பரின் பதவி உயர்வு பற்றி விவாதிக்க, உணவகத்தில், இரண்டு நண்பர்களுக்கு இடையே நடக்கும் சந்திப்பைப் படம்பிடிக்கிறது.

அப்ஸ்டாக்ஸின் இணை நிறுவனர் கவிதா சுப்ரமணியன் கூறு கையில், ‘உங்கள் எதிர்காலத்தை சொந்தமாக்குங்கள்’ என்ற பிரச்சாரமானது, அதிக இந்தியர்களை பங்குச் சந்தையில் பங்குபெற ஊக்குவிப்பதோடு, அப்ஸ்டாக்ஸ் மூலம் சரியான முதலீட்டுத் தேர்வுகளை மேற்கொள்ளவும் விரும்புகிறது.

இன்றைய இளம் இந்தியர்கள், நிறுவனங்களில் பங்கு களை வைத்திருப்பதன் மூலம் சொத்துக்களை சொந்தமாக்குவதன் மதிப்பையும், போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதையும் புரிந்து கொள்கிறார்கள்.

ஸ்டார்ட்அப் கலாசாரத்தில் பெரிய எழுச்சி உள்ளது. ஒவ்வொருவரும் தொ ழில்முனைவோராக இருக்க முடியாவிட்டாலும், நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வைத்தி ருக்கலாம் மற்றும் அதன் நீண்ட கால உச்சத்தில் பங்கேற்கலாம் என்பதை புரிந்துகொள்கிறார்கள்.

ஐபிஎல், கிரிக்கெட்டை மறுவரை யறை செய்தது போல், அப்ஸ்டாக்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்கான முதலீடுகளை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு 3 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளோம். இந்த பிரச்சாரம் இந்தியாவில் பங்கு முதலீட்டு கலாச்சாரத்தை வளர்க்க உதவும். அதிகமான இந்தியர்கள் தங்கள் நிதி எதிர்காலத்தை பொறுப் பேற்க ஊக்குவிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

மல்டிமீடியா மார்க்கெட்டிங் பிரச்சாரத்தில், தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள் ஆகியனவற்றில் விளம்பரங்கள் அடங்கும்.

பெருநகரங்கள் மற்றும் பெரிய பட்டணங்களில் இலக்குப் பிரிவுகளைச் சென்றடைய டிஜிட்டல் பயன்படுத்தப்பட்டாலும், அடுக்கு-2 மற்றும் அடுக்கு 3 நகரங்களுக்கான மீடியா கலவையில் தொலைக்காட்சி ஆதிக்கம் செலுத்தும்.

படிக்க வேண்டும்

spot_img