கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமனை சார்பில் உலக செவிலியர் தின விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து அவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் மருத்துவ கல்லூரி முதல்வர் பேசியதாவது: கொரோனா காலத்தில் தன் உயிரை துச்சமென நினைத்து பல உயிர்களை காப்பாற்றி பாடுபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செவிலியர்களின் பணியைப் பாராட்டி செவிலியர்கள் பத்மினி, சீதா, செல்வி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். மேலும் செவிலிய கண்காணிப்பாளர்கள் ரஹிதாபீ, நம்பிக்கைமேரி, ராணி, தேவகி, வனஜா, மகலாட்சுமி, அனிதா உள்ளிட்டோரை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில் மருத்துவர் கண்காணிப் பாளர் டாக்டர் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் செல்வி, ராஜலட்சுமி, தினேஷ், மது, மற்றும் நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், செவிலியர் சரளா மாதவி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை மூத்த செவிலியர் பத்மினி தலைமையில், செவிலியர்கள் செல்வி, சீதா, முருகன், கோகிலா உள்ளிட்ட செவிலிய நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.