fbpx
Homeபிற செய்திகள்ஆஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு மீண்டும் உறுதி

ஆஸ்திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு மீண்டும் உறுதி

சிவில் கடல்சார் பாதுகாப்பிற்கான ஆஸ்தி ரேலியா உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் கடல் எல்லைக் கட்டளை கமாண்டர்/கமாண்டர் ஜாயின்ட் ஏஜென்சி டாஸ்க் ஃபோர்ஸ்(Commander Maritime BorderCommand/Commander Joint Agency Task Force (COMMBC/CJATF), இறையாண்மை செயல் எல்லைப் பிரிவு அதிகாரி (Operation Sovereign Borders), ராயல் ஆஸ்திரேலியன் நேவி (RAN)ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்-சின் (Justin Jones) இந்திய வருகையின் மூலம் ஆஸ் திரேலியாவின் கடல்சார் பாதுகாப்பு உறுதிப்பாடு மீண்டும் உறுதி செய்யப் பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது, அக்டோபர் 14 முதல் 20 வரை, ரியர் அட்மிரல் ஜோன்ஸ், டெல்லியில் நடந்த ஆசிய கடலோர காவல்படை அமைப்புகளின் தலைவர் கள் கூட்டத்தில் (HAC GAM) பங்கேற்றார். சிவில் கடல்சார் பாதுகாப்பில் இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் உத்திசார் கூட்டு நாடுகளுடனான பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் இத்தகைய உறவுகளின் வலிமையையும், தொடர்ந்து பேச்சு நடத்துதல் மற்றும் தகவல் பகிர்வுக்கான திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தன.
ரியர் அட்மிரல் ஜோன்ஸ் கூறியதாவது:

ஆசிய கடலோர காவல் படை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தின் மூலமாக, ஆஸ்திரேலியா, ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய கடலோர காவல் முகமைகளுடன் நீண்ட கால உறவுகளை ஏற்படுத்தி அதை வலுப்படுத்தவும் சிவில் கடல்சார் பாதுகாப்பு விஷயங்களில் ஒத்து ழைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடலில் நடைபெறும் குற்றங்களை எதிர்த்துப் போராடி அவற்றைத் தடுப் பதற்கு இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டு செயல்பாட்டு நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஆஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது.

ஆஸ்திரேலியா சமீப காலமாக சிவில் கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கடல்வழி ஆட்கள் கடத்தல் (மனிதக் கடத்தல்) முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற் படை அயராது உழைத் ததால் கடத்தல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 183 பேரை ஆஸ்திரேலியா பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அரசு அண்மையில் மாறியிருந்தாலும், ஆள் மற்றும் மக்கள் கடத் தலுக்கு எதிரான ஆஸ்தி ரேலியாவின் வலுவான கொள்கைகளில் எந்த மாற் றமும் இல்லை என்றார்.

படிக்க வேண்டும்

spot_img