fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 1,263 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 1,263 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

தேசிய மென்பொருள் சேவை நிறுவ னங்கள் (நாஸ்காம்) கூட்டமைப்பின் துணைத் தலைவர் முனைவர் சந்தியா சிந்தால ருக்குமணி பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அண்ணா பல்க லைக்கழக அளவில் தேர்ச்சி பெற்ற 1,263 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பல்கலைக்கழக ரேங்க் பெற்ற 12 மாணவர்களுக்கு கேடயங்களும், பரிசுத் தொகையையும் வழங்கினார். அவர் பேசியதாவது:

இந்துஸ்தான் கல்வி குழுமத்தில் மாண வர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு 16000-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களைப் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.

இச்சாதனை புரிந்த கல்லூரி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டுகிறேன். டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி (Disruptive Technology) ஏஐ (AI),, எம்எல் (ML போன்ற திறன்களை தொடர்ந்து கற்க தேவையான அனைத்து பங்களிப்பையும் மாணவர் சமுதாயம் சேவை மனப்பான்மையுடன் ஆற்ற வேண் டும் என்றார்.

கல்லூரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பேசுகையில், தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் பாடத் திட்டத்தில் இணைப்பதற்கு உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

முதல்வர் ஜெ.ஜெயா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
முனைவர் சந்தியா சிந்தால ருக்குமணி பார்த்தசாரதி, உதயசங்கர், இணைச் செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img