fbpx
Homeபிற செய்திகள்இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றம்

இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கும்மனூர் ஊராட்சியில் இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 52 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா, 12 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையுடன் தலா ரூ.4000 கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள், 5 நபர்களுக்கு இருளர் இன சாதிச்சான்றிதழ்கள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

உடன் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், வட்டாட்சியர் அசோக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img