ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கோவை பீளமேடு மசக் காளிபாளையம் திடலில், இல்லந்தோறும் இளைஞரணி
உறுப்பினர் சேர்ப்பு பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்,
இந்நிகழ்வு, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ், க.விஜயகுமார், அ.அஸ்ரப் அலி, கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன், நாகராஜசோழன் ஆகி யோர் முன்னிலையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக்.
மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர். பையா என்கின்ற கிருஷ்ணன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத மலை சேனாதிபதி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் மற்றும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.