fbpx
Homeபிற செய்திகள்இளம் பெண்களிடையே விளையாட்டு சிஎஃப்சி உடன் கைகோர்க்கும் அக்கோ

இளம் பெண்களிடையே விளையாட்டு சிஎஃப்சி உடன் கைகோர்க்கும் அக்கோ

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளுக்கு ஒரு வருடம் முழுவதும் கால்பந்து பயிற்சி அளிக் கப்படும் என்று நீண்ட கால கூட்டாளியும் முன்னாள் இந்தியன் சூப்பர் லீக் சாம்பியனுமான சென்னை யின் எஃப்சி (சிஎஃப்சி) உடன் இணைந்து அக்கோ (ACKO) அறிவித்தது.

இந்த நிறுவனம் பெண் களுக்கு இலவச கருவிகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கும்.
பெண்களின் பின்ன ணியை பொருட்படுத்தாமல் அவர்கள் முழுத்திறனையும் அடைய ஊக்குவிக்கிறது.

மகளிர் தினகருப் பொருள் Break the Bias (சார்பு நிலையை உடை) என்பதாகும். இந்த முயற்சி இளைஞர்களின் விளையாட்டுகளில் உள்ள டக்கத்தை மேம்படுத் துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

அக்கோ பிராண்டட் முதுகு பைகள், ஜெர்சிகள், பூட்ஸ், ஷின்கார்ட்ஸ், கால்பந்துகள் மற்றும் சிப்பர்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அக்கோ கனவு வாகனம் பள்ளிக்கு சென்றது. உபகரணங்கள் வழங்கப்பட்ட பிறகு, சிஎஃப்சி பயிற்சியாளர்கள் மாணவிகளுக்கு 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

இது மட்டுமல்லாமல், பெண்கள் சிஎஃப்சி வீரர்களுடன் வீடியோ அழைப்பில் பேசினர். அவர்களின் வார்த்தைகள் மாணவிகள் பெரிய அளவில் கனவு காண அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
https://youtu.be/nJn85UT0qSY

இந்த முயற்சியை பற்றி அக்கோ மார்கெட்டிங் நிர் வாக துணைத்தலைவர் ஆஷிஷ் மிஸ்ரா பேசு கையில், “அக்கோ மூலம் கால்பந்து போன்ற விளை யாட்டுகளில் இளம் பெண் களை மேம்படுத்த முயற்சி செய்கிறோம்.

கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பெண்களின் பிரதிநிதித்து வம் இன்றும் பாதகமாகவே உள்ளது. இந்த முயற்சி யால், அக்கோ, சிஎஃப்சி ஆகியவை பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வடிவமைக்கும் திறனை மேம்படுத்துவதை நோக்க மாகக் கொண்டுள்ளன.

அவர்களின் கனவுக ளைத் தொடரவும், எதிர் கால விளையாட்டு வீராங் கனைகளாக அவர்க ளின் லட்சியங்களை நன வாக்கவும் அவர்களை ஊக் குவிக்க விரும்புகிறோம்’ என்றார்.

சென்னையின் கால்பந்து கிளப் இணை உரிமையாளர் விட்டா டேனி கூறுகையில், ‘ஒரு கிளப் என்ற முறை யில் எதிர்காலத்தை அங்கீகரிப் பது முக்கியம்.
இது பெண் களின் எதிர்காலம்.

இதை செய்ய ஒன்றிணைந்த அக்கோ மற்றும் சென் னையின் எஃப்சியின் இளம் பயிற்சியாளர்களை பாராட்ட விரும்புகிறேன். இளம் பெண்கள் தங்கள் கால்பந்து கனவை வலுப் படுத்த இது அருமையான வாய்ப்பாக இருக்கும்’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img