ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும் பத்தினருக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்க, செய லாளர் ஜீவாதங்கவேல் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் பொன்னி அரிசி மற்றும் மசாலா பொருட்களை வழங்கினர்.
உதவும் மனப்பான்மை யுடன் சில நல்ல மனி தர்களின் பங்களிப்போடு சங்கத்தின் முயற்சியால் பருப்பு, புளி, கோதுமை என மொத்தம் 19 வகையான உணவு பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகஈரோடு மாவட்டத்தின் புதிய எஸ்.பி. டாக்டர் சசிமோகன் நிவாரண பொருட்களை பத்திரி கையாளர்களுக்கு வழங்கினார்.
எஸ்.பி. பேசுகையில்,” தவறுகளை சுட்டிக் காட்ட வும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு நல்லது நடப்ப வைகளை பத்திரி கைகள் ஊக்குவிக்க வேண்டும்“ என்றார்.
இந்த நிகழ்வில், ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந் துறை, சென்னிமலை, அரச் சலூர், சிவகிரி, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட் டம் முழுக்க இருந்து 200 க்கும் மேற்பட்ட பத்திரி கையாளர்கள் நேரில் வந்து நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர்.
சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், உதவி பொருட்கள் வழங்கிய சக்தி மசாலா நிறுவனம் உள் ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.
சங்க துணை தலைவர் கள் சுப்பிரமணியம், மூர்த்தி துணை செயலாளர்கள் ராஜா, நவீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தி.க.சண்முகம், பழனிச் சாமி, மகேந்திரன், விஜய் சாய்,பார்த்திபன், பாஸ்கரன், ஜான்சன், வேலுச்சாமி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.