fbpx
Homeபிற செய்திகள்உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணி: அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு- மாணவர்களுடன் கலந்துரையாடல்

உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணி: அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு- மாணவர்களுடன் கலந்துரையாடல்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை, பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற் றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மாணவர் களுடன் கலந்துரையாடினர்.

பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் மரு.மணி வாசன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொதுப்பணித்துறை அமைச் சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது:
முதல்வர் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து அவர் களின் கோரிக்கைகளை கேட் டறிந்து, அதற்கான தீர்வு காண்பதற்காகத் தான் இன்றைய தினம் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக வந்துள்ளீர்களோ அதை அடைந்தே தீர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் கல்வி கற்க வேண்டும்.

கடந்த முறை இக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டபோது, சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களிடம் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

இன்றைய தினம் இக்கல்லூரியில், ஆய்வு மேற்கொண்டதன்பேரில், காலநிலை மாற்றங்களினால் இக்கல்லூரிக்கு செல்லும் பாதை யானது சீரமைக்கப்படாத சூழ்நிலையில் உள்ளது. மாண வர்கள் நகரப் பகுதியில் உள்ள நூலகத்திற்குச் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.

எனவே, விடுதியில் இருந்து நூலகத்திற்குச் செல்ல ஒரு பாதையினை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். தேர்வு சமயம் நெருங்கிவிட்ட காரணத்தினால் அனைவரும் கவனமாக படிக்க வேண்டும்.

உங்கள் படிப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் மருத்துவர் ஆவதற்கு தமிழக அரசு மற்றும் மருத்துவத்துறை, எனது துறை உறுதுணையாக இருக்கும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

நிலச்சரிவு தடுக்க நடவடிக்கை
பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் நிலச் சரிவு இருந்ததன் காரணத்தினால் தான் சென்ற டிசம்பர் மாதம் பைலட் புரோகிராம் என்ற திட்டத்தின் மூலம் மண் ஆணி பொருத்தி மண் சரிவினை தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

மாநில நெடுஞ்சாலை மூலம் செய்த இப்பணியினை தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ள நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. மண் ஆணி பொருத்தப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படவில்லை. இது முதல்வரின் கவனத்துக்கு எடுத் துச் செல்லப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கோட்ட பொறியாளர், இது போன்று, 53 இடங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று மண் ஆணி பொருத்தும் பணியினை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த மழையின்போது, நீலகிரி மாவட்டத்தில் கூட லூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் நீடிக்கப்படுமா, போக்கு வரத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதனை நானும், வனத்துறை அமைச்சரும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டோம்.

தற்காலிகமாக இப்பகுதியில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. புவியியலாளர்கள் இப்பகுதியினை பயன்படுத்த முடியாது என கூறும்பட்சத்தில், வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வனத்துறையினரிடம் ஒப்புதல் பெற்று சுமார் 12 மீட்டருக்கு சாலையினை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

உதகை மருத்துவக் கல்லூரியில் சுமார் 150 மாணவர்கள் சேர்க்கப் பட்டு, இக்கல்லூரி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

முன்னதாக உதகை காக் காதோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் மற்றும் துணை கட்டிடத்தினையும், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதையும் அமைச்சர்கள் இரு வரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் (நீலகிரி) சச்சின் போஸ்லே துக்காராம், முதன்மை தலைமைப் பொறி யாளர் சத்தியவாகீஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, கல்லூரி உதவி முதல்வர் மரு.குமுதா, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தவமணி, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img