fbpx
Homeபிற செய்திகள்உப்பை குறைக்க உதவும் அஜி-னோ-மோட்டோ

உப்பை குறைக்க உதவும் அஜி-னோ-மோட்டோ

அஜி-னோ-மோட்டோடி(MSG) குறித்த உண்மைகள் மற்றும் அதனோடு தொடர் புடைய செய்திகள் பற்றி விவாதிப்பதற்காக நடத்தப் பட்ட ஒரு மெய்நிகர் ஆன் லைன் நிகழ்வில் அஜி-னோ-மோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இஷிகாவா- கட்சுயுகி, அந்நிறுவனத்தின் சந்தையாக்கல் மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் ஆகி யோரோடு இந்தியாவில் புகழ்பெற்ற, பிரபலமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மெய்நிகர் சந்திப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், ஆஸ்டர் மெட்சிட்டி கொச்சியின் உணவகக் குழலியல் நிபுணர் டாக்டர் ஜெஃப்பி ஜார்ஜ், பெங்களூரு ஃபோர்டிஸ் ஹெல்த்கேரின் உள்மருத்துவ முதுநிலை நிபுணர் டாக்டர் ஆதித்யா சௌத்தி, பெங்களூரு மணிப்பால் மருத்துவ மனையின் முதன்மை உணவுமுறை வல்லுனர் நவனிதா சாஹா, மும்¬ பயின் சிகே பிர்லா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவவியல் நிபுணர் டாக்டர் அருணா கல்ரா, சென்னை, ரேலா மருத்துவமனையின் இதயவியல் இடை யீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. அசோக்குமார், டெல்லி, இந்திரபிரஸ்தா அப்போலோ ஹாஸ்பிட் டல்ஸின் உணவு முறை வல்லுனர் அனிதா ஜட்டானா, சென்னையைச் சேர்ந்த பிரபல உணவு முறை வல்லுனர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற முக்கிய நபர்களுள் சிலர்.

ஆரோக்கியமான ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அளவாக 5 கிராமுக்கும் (1 தேக்கரண்டி)மிகைப்படாத உப்பு என்ற அளவையே உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கிறது.

அஜினோமோட்டோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இஷி கா வா-கட்சுயுகி கூறி யதாவது: எம்எஸ்ஜி – ல் (அஜி-னோ-மோட்டோ) மேஜை உப்போடு (39%) ஒப்பிடுகையில், வெறும் 12%, அதாவது மூன்றில் ஒரு பங்கு சோடியம் மட்டுமே இருக்கிறது.

சீசனிங் பொருட்களிலிருந்து பெறப்படுபவை உட் பட, மேஜை உப்பை விட பொதுவாகவே பயன்ப டுத்தப்படும் எம்எஸ்ஜியின் அளவு குறைவானதாகும்.
உணவில் உப் பின் அளவை நாம் குறைத்துவிட்டு, ஒரு சிட்டிகை எம்எஸ்ஜியை சேர்த்துக்கொள்வோமென்றால், உட்கொள்ளப்படும் உப்பின் அளவை கணிசமாக குறைக்க இது உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டியுள்ளன,” என்றார்.

அஜினோமோட்டோ இந்தியாவின், சந்தையாக்கல் – மேலாளர் கோவிந்த பிஸ்வாஸ் பேசுகையில், “குளூட்டாமிக் அமிலம், நீண்ட நேரம் நீடிக்கின்ற ‘குழம்பு’ அல்லது ‘இறைச்சி’ சார்ந்த, வாயில் உமிழ்நீரை சுரக்கச் செய்யும் சுவையையும் மற்றும் நாக்கிற்கு ஒரு இனிய உணர்வையும் வழங்குகிறது,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img