fbpx
Homeபிற செய்திகள்உயர்த்தப்பட்ட மின் நிலைக் கட்டணத்தை சிறு, குறுந்தொழிலுக்கு ரத்து செய்ய வேண்டும்-: கொசிமா வலியுறுத்தல்

உயர்த்தப்பட்ட மின் நிலைக் கட்டணத்தை சிறு, குறுந்தொழிலுக்கு ரத்து செய்ய வேண்டும்-: கொசிமா வலியுறுத்தல்

மின்சார வாரியத்தால் தற்போது உயர்த்தப்பட்டுள்ள நிலை கட்டணத்தை குறு மற்றும் சிறு தொழில்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று கொசிமா தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கொசிமா சார்பாக அதன் தலைவர் பி.நல்லதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொசிமா இண்டஸ்ட்ரியல் பார்க் இன்ஃபிரா ஸ்ட்ரக்சர் (COSIEMA INDUSTRIAL PARK INFRASTRUCTURE) வேலைகளை கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை சிட்கோவில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தொழிலாளர் விடுதி கட்ட அடிக்கல் நாட்டிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பூரில் தொடங்கி வைத்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற நிகழ்வில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தை (TNCGS) தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தத் திட்டத்தை அனைத்து தொழில் முனைவோருக்கும் சென்றடைய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம்.

சூலூரில் அமைய உள்ள AERO SPACE பார்க்கில் சிறு மற்றும் குறுந்தொழில் முனை வோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மின்சார வாரியத்தால் தற் போது உயர்த்தப்பட்டுள்ள நிலை கட்டணத்தை குறு மற்றும் சிறு தொழில்களுக்கு ரத்து செய்ய வேண்டும். குறுந்தொழில்கள் துவங்க அடுக்குமாடி தொழிற் பேட்டையை அமைத்து தர வேண்டும்.

சிட்கோ மற்றும் சுற்று வட்டாரங்களில், குவிந்துள்ள குப்பையை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும். கோவை மாவட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு, திருத்தி அமைக்கப்பட்ட மாஸ்டர் பிளான் உடனே வெளியிட்டு அதில் தொழில்களுக்கு என்று தனிப்பட்ட INDUSTRIAL ZON இடங்களை அடையாளப்படுத்த வேண்டும்.

அரசு தொழிற்பேட்டைக்கு வழங்கும் சலுகைகள் அனைத்தும் தனியார் தொழிற் பேட்டைக்கும் வழங்க வேண்டும். சிட்கோ தொழிற்பேட்டையை உலகத்தரம் வாய்ந்த தொழிற்பேட்டையாக மாற்ற அரசு ஆவன செய்ய வேண்டும்.

மத்திய அரசுக்கு கோரிக்கை
மூலப்பொருள்கள் விலையேற் றம் காரணமாக தொழில்கள் முடங்கும் வாய்ப்பு உள்ளது. எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் அதில் தொழில் அமைப்புகளையும் உறுப்பினர்களாக ஆக்க வேண் டும்.

மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த மூலப் பொருள் ஏற்றுமதிக்கான வரி யை நீக்கக்கூடாது. கோவையில் பல ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்த செயில் நிறுவன (மத்திய அரசு நிறுவனம்) கிளையை மீண்டும் திறக்க ஆவன செய்ய வேண்டும்.

GSTR – 1ல் மாதந்தோறும் பதிவு செய்வதுபோல் GSTR 3 Bயிலும் பணம் கட்டாமல் UPLOAD செய்து 3 மாதங்களுக்கு பிறகு கட்ட அனுமதிக்க வேண்டும். ஜிஎஸ்டிக்கு மாதந்தோறும் கட்டும் கட்டணத்தை 3 மாதங் களுக்குப் பிறகு கட்ட அனுமதிக்க வேண்டும்.

வங்கியில் ஏற்கனவே மத்திய அரசு அளித்த 2% வட்டி மானியம் இதுவரை கிடைக்க வில்லை. இதை 5% ஆக உயர்த்தி உடனே வழங்க ஆவன செய்ய வேண்டும்.

தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் இருந்து நடப்பு மூலதன கடனை 20 விழுக்காடில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
கோவையில் அமைய உள்ள TECHNOLOGY CENTER (தொழில் நுட்பமையம்) – மாநில அரசு நிலம் வழங்கி உள்ளது.

மத்திய அரசின் MSME அமைச்சகம் அமைக்க உள்ளது. அதில் கோவையில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு களையும் இணைத்து அனைவரும் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோவைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட ரயில் பெட்டி தொழிற்சாலையை கொண்டு வர வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் நடப்பு மூலதன கடன் உதவியை (Working Capital Loan) Turnover 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஜாப் ஆர்டர் (JOB ORDER) செய்பவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img