fbpx
Homeபிற செய்திகள்உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் கிளென்மார்க் நிறுவனம் நடத்தியது

உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் கிளென்மார்க் நிறுவனம் நடத்தியது

ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிளென்மார்க் நிறுவனம் செப்டம்பர் மாதத்தை உலக இதய மாதமாக கொண்டாடுவதாக அறிவித்தது.

உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் 42 நகரங்களில் உள்ள 8 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் 10 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் மூலம், 28 பேரணிகள் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையிலும், சென்னை மற்றும் ஐதராபாத்தில் 13 விழிப்புணர்வு பேரணிகளும் இந்நிறுவனம் நடத்தியது.

அதில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் இந்திய மருத்துவர்கள் சங்கம், மும்பை மேற்கு பிராந்திய இந்திய மருத்துவ சங்கம், மலாட் மருத்துவ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மும்பை மலாட்டில் கடந்த 25-ம் தேதி சுசக் மருத்துவமனையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வடக்கு மும்பை நாடாளு மன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி, நடிகை சுதா சந்திரன், இந்திய மருத்துவர்கள் சங்க கவுரவ பொதுச் செயலாளர் டாக்டர் அகம் வோரா, பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் ஷஷாங்க் ஜோஷி உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களுடன் சுமார் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழுவும் கலந்து கொண்டது.

இதில், கிளென்மார்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ‘உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு முத்திரை’ வெளியிடப்பட்டது.

கிளென்மார்க் நிறுவனத்தின் குழு துணைத் தலைவரும், இந்திய பார் முலேஷன்ஸ் பிரிவு தலைவருமான அலோக் மாலிக் கூறுகையில், இதயநோய்களுக்கான முக்கிய காரணியாக உயர் ரத்த அழுத்தம் இருந்தாலும், இது பற்றிபெரும்பாலான நோயாளிகள் அறிந்திருக்கவில்லை.

எங்கள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் இந்நோய்க்கு எதிராக சாத்தியமான நட வடிக்கையை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது என்றார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை திட்டத்தை மேற்கொள்ள சமீபத்தில் இந்நிறுவனம் TakeChargeAt18 என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.

ரத்த அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வை இந்நிறுவனம் அதன் இணையதளம்: #TakeChargeAt18 உட்பட பல்வேறு சேனல்கள் மூலம் 20 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img