fbpx
Homeபிற செய்திகள்உலக சிறுநீரக தினம் : கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

உலக சிறுநீரக தினம் : கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு நடைபயணம்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, ராயல் கேர் மருத்துவமனை சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுநீரகம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டனர்.

உலக சிறுநீரக தினம், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாதம், இரண்டாவது, வியாழக்கிழமை அனுசரி க்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை நீலாம்பூர், மற்றும் காந்திபுரம் பகுதியில் உள்ள ராயல் கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையின், சார்பில் விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொள்ளப்ப ட்டது,

கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தாமஸ் பூங்கா, பகுதியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நடை பயணத்தில் மருத்துவமனை பணியாளர்கள், மற்றும் பேரூர் தமிழ் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, ஊர்வலமாக சென்றனர். இந்த விழிப்புணர்வு பயண த்தை, ராயல்கேர் மருத்துவ மனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் பொது மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தவும், உரிய நேரத்தில் உயிர்களை காக்க சிகிச்சை அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img