fbpx
Homeபிற செய்திகள்உலக தலைக்காயம் தினத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார்

உலக தலைக்காயம் தினத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார்

உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு கோவை ராயல் கேர் மருத்து வமனை சார்பாக நடைபெற்ற இரு சக்கர வாகன பேர ணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காமலும், கைபேசி பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்டுவதாலும், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவ தாலும், மது அருந்தி ஓட்டுவதாலும், விபத்துகள் மூலம் தலைக்காயங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தலைக்காயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக தலைக்காயம் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதில் தலைக்காயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பேரணியைதுவக்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் மாதேஸ்வரன், தலைக்காயங்களால் ஏற்படும் பாதிப்புகளும், காயங்களால் ஏற்ப டும் உயரிழப்புகளை தடுக்கவும், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைய ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிட்டி யூனிட் முன்பாக துவங்கிய பேரணி, கணபதி சரவணம்பட்டி, காளப்பட்டி, செரயாம்பாளையம் வழியாக நீலம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனைவரைசென்றடைந்தது.

விழாவில், மருத்துவர்கள் பால் வண்ணன் விஜயன் சிவகுமார் ரகு ராஜா பிரகாஷ் ஸ்ரீதேவி கார்த் திகேயன் தினேஷ் சிதம்பரம் செந்தில்குமார் குதரத்துல்லா, மருத்து வமனையின் சீனியர் மேனேஜர் மார்க்கெட்டிங் வெங்க டேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img