fbpx
Homeபிற செய்திகள்உல்லத்தி ஊராட்சிப் பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள்: நீலகிரி ஆட்சியர் அம்ரித் ஆய்வு

உல்லத்தி ஊராட்சிப் பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள்: நீலகிரி ஆட்சியர் அம்ரித் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் செய்தியாளர் பயணத்தின்போது, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உதகை ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சி பன்னிமாரா பகுதியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், அண்ணா நகர் பகுதியில், பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பழங்குடியினர்களுக்கு தலா ரூ.3 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் நேற்று முன்தினம் (அக்.11) மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முதல்வரின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 35 ஊராட்சிகளில் மக்க ளின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும் முடித்திடவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை விரைவில் தொடங்கி தரமான முறையில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 2019&2020-ம் ஆண்டில் 971 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு, 903 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் உதகை ஊராட்சி ஒன்றி யத்தில் 439 வீடுகள் கட்டும் பணிகள் எடுக்கப்பட்டு, 439 வீடுகளும் முடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2021-2022 ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 1,507 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 313 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 109 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பசுமை வீடுகள்
2020-&2021-ம் ஆண்டில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 1,416 வீடுகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 196 வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டு, 97 வீடுகள் முடிக் கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் பல்வேறு நிலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாக மேற்கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், வீடுகள் கட்டி முடித்தவுடன் சம்மந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்.

செய்தியாளர் பயணத்தின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சிவக்குமார், விஜயா, உல்லத்தி ஊராட்சித் தலைவர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img