fbpx
Homeபிற செய்திகள்உள்ளூர் உற்பத்தித் திறனை மேம்படுத்த ஹையர் நிறுவனம் புதிய தொழிற்சாலை திறப்பு

உள்ளூர் உற்பத்தித் திறனை மேம்படுத்த ஹையர் நிறுவனம் புதிய தொழிற்சாலை திறப்பு

வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஹையர் (Haier) நிறுவனம், தொடர்ந்து 13 ஆண்டுகளாக வீட்டு உபயோக சாதனங்களில் உலகின் நம்பர் 1 பிராண்ட்டாக விளங்கி வருகிறது.

இந்நிறுவனம், புனே வின் ரஞ்சன்கானில் உள்ள அதன் முதல் தொழிற் பேட்டையில் டீப் ஃப்ரீசர் உற்பத்திக்கான புதிய தொழிற்சாலையை திறப்ப தாக அறிவித்துள்ளது.

இந்திய நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்றவாறு பிரீமியம் மற்றும் உயர்தர பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முன்மொழிவின் தனது உறுதிப்பாட்டை ஹையர் வலுப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சதீஷ் என்.எஸ். ‘புனேவில் உள்ள எங்கள் தொழில் பூங்காவின் விரிவாக்கத்தை புதிய டீப் ஃப்ரீசர் வசதியுடன் காண்பது மிகவும் பெருமையான தருணம்.

இது வணிக மற்றும் வீட்டு உறைவிப்பான் பிரிவுகளுக்கு எங்கள் உள்ளூர் உற்பத்தி திறனை மேம்படுத்த உதவும்.

இந்தத் தொழிற்சாலையின் திறப்பு விழாவானது நமது உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல்,இந்தியச் சந்தைக்கான தனிப்பயனாக் கப்பட்ட தீர்வுகளை அதிக நேர-திறன்மிக்க முறையில் உருவாக்கவும் உதவும்.

இந்த வளர்ச்சியானது, நமது இறக்குமதியை சார்ந் திருப்பதைக் குறைப்பதோடு, எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியையும் அதிகரிக்கும்’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img