மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில், கல்வெட்டு அமைத்தல் மற்றும் நினைவு கேடயம் வழங்கல், சங்கத் தலைவர் வாசுகி நிலவழகன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர் ஒன்றியக்குழு சேர்மன் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு விழா நினைவு கேடயத்தை வழங்கி, கல்வெட்டினை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் கேடயத்தை பெற்று கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.