fbpx
Homeபிற செய்திகள்ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கோவை ஆட்சியர் ஆலோசனை

ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கோவை ஆட்சியர் ஆலோசனை

ஊராட்சி மன்ற தலைவர்களுட னான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்றும் (ஏப்.7) இரண்டாவது நாளாக நடக்கிறது.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 228 ஊராட்சி மன்றங்களைச் சார்ந்த தலைவர்களின் கருத்துக்ளை அறிந்து கொள்ளும் வகையில் ஆலோசனைக்கூட்டம் நடை பெறுகின்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் கடைகோடி மக்க ளையும் தொடர்பு கொள்ளும் முதனிலை அலுவலர்களாக பணியாற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் தங்களை ஒருங் கிணைத்து, அவற்றினை முன்னின்று செயல்படுத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை நேரடியாக உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரங்களை பெருக்கிடும் வகையிலும், பொதுமக் களின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி, மக்கள் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்த உறு துணையாக இருக்க வேண்டும்.

சாலைவசதி, தெருவிளக்கு மற்றும் குடிநீர் தேவைகளில் தன்னிறைவு பெறும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) என்.உமா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆர்.கமல கண்ணன், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img