fbpx
Homeபிற செய்திகள்எச்.டி.எஃப்.சி. வீட்டு வசதி நிதி நிறுவனம் இடமாற்றம்

எச்.டி.எஃப்.சி. வீட்டு வசதி நிதி நிறுவனம் இடமாற்றம்

இந்தியாவின் முதன்மையான வீட்டு வசதி நிதி நிறுவனமான எச் டிஎஃப்சி லிமிடெட், தனது கண்டோன்மென்ட் அலுவலகத்தை லாசன் சாலையில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றியுள்ளது.

வாடிக்கையாளர்களின் கனவு வீட்டை வாங்குவதற்கு வீட்டுக் கடன்களை பெற வசதியாக நகரின் மையத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. எச்.டி.எஃப்சி பிராந்திய வணிகத் தலைவர் அஜய்வர்மா புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

எச்டிஎஃப்சி லிட் நிர்வாக இயக்குநர் ரேணு சுத் கர்னாட் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முக்கிய பொறியியல் உபகரண உற்பத்தி மற்றும் ஃபேப் ரிகேஷன் மையமாக திருச்சிராப்பள்ளி திகழ்கிறது.

பல பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளை கொண்டுள்ளன. முதல் முறையாக வீடு வாங்குபவர் கள் மற்றும் சொத்துக்காக பெரிய அளவில் வீடு வாங்க விரும்புபவர்கள் என வீட்டுவசதிக்கான தேவை இரு தரப்பினரிடமும் தொடர்கிறது.

டிஜிட்டல் சேவைகள்
வாடிக்கையாளர் தங்கள் வீட்டு கடன் கணக் கை வசதியாக நிர்வகிக்க உதவும் வகையில் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட சேவைகளை அறிமுகப்ப டுத்தியுள்ளது.

எச்டிஎஃப்சி கடன்கள் மற்றும் சில்லறை டெபாசிட்டுகளுக்கான ஆன்லைன் டிஜிட்டல் தளத்தில் கவனம் செலுத் தியது. அனைத்து வாடிக் கையாளர் கோரிக்கைக ளுக்கும் ‘எச்டிஎஃப்சி வாடிக்கையாளர் இணைப்பை’ தொடங்கியது.

ஹவுசிங் ஃபைனான்ஸ் துறையில், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கடன் செயலாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த முதல் நிறுவனம் எச் டிஎஃப்சி ஆகும்.
எப்போதும் இல்லாத வகையில், நிதியாண்டு22-ல் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சில்லறை வீட்டு கடன்களை அங்கீகரிக்கும் மைல்கல்லை எட்டுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

ஜூன் 30-ல் முடிவடைந்த ஆண்டில், 23% வீட்டுக் கடன்கள் அளவு அடிப் படையில் மற்றும் 10% மதிப்பு அடிப்படையில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (இடபிள் யூஎஸ்) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களின் (எல்ஐஜி) வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பெரும்பாலானோருக்கு வீடு வாங்குவதே மிகப் பெரிய முதலீடாகவும், வாழ்நாளில் ஒருமுறை எடுக்கப்படும் முடிவாகவும் இருப்பதால், இது நிதியை மட்டுமல்ல, வாடிக்கையாளர்களின் வீட்டு தேவைகளுக்கும் முழுமையான தீர்வை வழங்கும் வகையில் வளர்ந்துள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img