தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பா ன்மை யுடன் வெற்றி பெற் றுள்ளது. இதனால் 10 ஆண்டு களுக்குப் பிறகு திமுக ஆட்சியமைக்க உள்ளது. தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான் மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி« யற்க உள்ளார்.
தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற் றதையடுத்து, சென்னை மெரினாவில் உள்ள கரு ணாநிதி நினைவி டத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின், தான் வெற்றி பெற்ற சான் றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இன்று காலை தன் தந்தை மு.கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, ஸ்டாலின் தாயாரை சந்தித்து ஆசி பெற்றதோடு தன்னுடைய வெற்றியை குடும்ப உறுப் பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதேபோல் திமுகவின் மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கோபாலபுரம் இல்லம் என்பது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வாழ்ந்த இல்லம். எந்த வொரு உணர்ச் சிகரமான விஷயமாக இருந்தாலும் கோபாலபுரம் இல்லம் சென்று அங்குள் ளவர்க ளிடம் ஆசி பெறுவது ஸ்டாலினின் வழக்கம்.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து மு.க. ஸ்டாலின் தனது சொந்தங்களுடன் வெற் றியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் அங்கிருந்து திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளி த்தனர்.
முத்தரசன், ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ் டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (செவ் வாய்க் கிழமை) காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ் வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவா லயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.அதுபோக புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக எம்.எல். ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந் தெடுக்கிறார்கள்.
அதன் பிறகு மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமை ச்சராக தேர்ந்தெடு க்கப்பட் டதற்கான கடிதத்தை வழங் குகிறார்.
மு.க.ஸ்டாலின் எனும் நான்… என ஸ்டாலின் உச்சரிக்கும் அந்த வார்த்தைகளை கேட்க திமுக தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறுமென ஸ்டாலின் நேற்று அறி வித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
அதன்படி 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற உள்ளது.
முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரு வது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்,
எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது. தற்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
அதிமுக தோல்வி அடைந்ததையொட்டி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று ராஜினாமா செய்துள்ளது. சேலத்தில் இருந்தபடியே தனது ராஜினாமா கடிதத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.