fbpx
Homeபிற செய்திகள்ஏரியலின் இயக்கத்துக்கு ஆதரவாக நடிகை அனுமேனன்

ஏரியலின் இயக்கத்துக்கு ஆதரவாக நடிகை அனுமேனன்

“லோலா குட்டி’’ என்னும் தனது திரைப் பெயரால், மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகையான அனு மேனன், இன்று வீடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மை பற்றி விவரிக்க சமூக ஊடகங்களில் புதிய முறையை கையாண்டு தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.


சமீபத்தில் தொடங்கப்பட்ட ஏரியலின் எஸ்.டி.எல் (#ShareTheLoad) இயக்கத்திற்கு ஆதரவாக, ஒரு மிக முக்கியமான விஷயத்தை நிரூபிக்க, அனுவின் வீடியோவில் அவர் தனது பெயரை அனில் என்று மாற்றிக்கொண்டார். அவரது கணவரின் நண்பர் பெயர் அனில். சலவை சோப்பு பிராண்டான ஏரியலின் #ShareTheLoad பிரச்சார வீடியோவை பார்த்து அதன் தாக்கத்தால், தனது சமூக ஊடக பக்கங்களில், வீட்டு வேலைகளைப் பகிர்வதில் நிலவும் பாலின சமத்துவமின்மையை வீடியோ வெளியிட் டுள்ளார். அந்த வீடியோ அவரின் நகைச்சுவை பாணியிலும், சிந்திக்க வைக்கவும் செய்கிறது.
“ஏரியலின் சமீபத்திய#SeeEqual to #ShareTheLoad திரைப்படம், வீட்டு வேலைகளை பிரிப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வு பற்றி என்னை சிந்திக்க வைத்தது.


அது எழுப்பிய கேள்வி என்னுள் இருந்து கொண்டே இருந்தது – ஆண்கள் தங்கள் நண்பர்கள், அறை தோழர்கள், சகோதரர்கள் ஆகியோருடன் வேலைகளைப் பிரித்துக் கொள்ள முடியும் என்றால்…


பிறகு ஏன் அவர்களின் மனைவிகளுடன் கூடாது? தெளிவாக, ஒரே மாதிரியான பாலினத்தவர்களில் இருந்து உருவாகும் சுயநினைவற்ற சார்பு வழியில் வருகிறது. எனவே, எனது சொந்த வழியில், இதைப் பற்றி மேலும் உரையாடலைத் துவங்க விரும்புகிறேன். எனது பெயரை எனது கணவரின் சிறந்த நண்பரின் பெயராக மாற்றுவது ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சாத்தியம் இருந்தால், ஏன் முடியாது?” என்கிறார் அனு மேனன்.


Ariel தனது நீண்டகால #ShareTheLoad பிரச்சாரத்தின் ஐந்தாவது பதிப்பை#SeeEqual திரைப்படத்துடன் பிப்ரவரி 11 அன்று தொடங்கியது. இப்படம் இதுவரை 45 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img