கொரோனா தொற்று பரவலை தடுத்திட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரு கின்றது. இந்நிலையில், ஊர டங்கு அமலில் உள்ளதால், திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய் கறிகள் அடங்கிய நிவாரணத் தொகுப்பினை திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி வரு கின்றனர்.
திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அ.முக்குளம், வந்தவாசி, அழ காபுரி, குண்டுகுளம் மற்றும் எழுவணி கிராம மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக தொழில்துறை அமைச் சர் தங்கம் தென்னரசு தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்போது நரிக்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கு.கண்ணன், முன்னாள் சேர்மன் எம்.பி. ஜெயராஜ் உடன் இருந் தனர். இந்நிகழ்ச்சிக்கான, ஏற்பாடு களை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் காளீஸ்வரிசமயவேலு மற்றும் அ.முக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.