fbpx
Homeபிற செய்திகள்ஏ.டி. ராஜ்குமார் எழுதிய ‘மனமேநீ மகிழ்ந்திடு’ புத்தகம் வெளியீடு

ஏ.டி. ராஜ்குமார் எழுதிய ‘மனமேநீ மகிழ்ந்திடு’ புத்தகம் வெளியீடு

எழுத்தாளர் ஏ.டி. ராஜ்குமார் ஆங்கிலத்தில் எழுதிய ‘It’s ONLY MIND’ மற்றும் அதன் தமிழாக்கம் ‘மனமே நீ மகிழ்ந்திடு’ என்னும் புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.விழாவில் பாரம் பரிய ஆர்வலரும், எழுத் தாளருமான வல்லப சீனிவாசன், எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம், நிலை மேம்பாட்டு பயிற்சியாளரும், எழுத் தாளருமான ஆர். மகேந் திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

எழுத்தாளர் ஏ.டி. ராஜ்குமார், ஏற்கன வே 2 புத்தகங்களை எழுதியுள் ளார். இது புத்தக வாசிப்பாளர் கள் இடை யே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த 3-வது புத்தகம் வெளிவந்துள்ளது.

எழுத்தாளர் ஏ.டி. ராஜ்குமார் பேசியதாவது: மனித மனங்கள் செய்யக் கூடிய மிக மோசமான காரியங்களில் ஒன்று ஒப்பீடு என்பதை புரிந்து கொள்வது முக்கியமான ஒன்றாகும். மக்கள்தங்களை மற்ற வர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப் பதுடன் ஒப்பிடுவதற்கும் பயப்படுகிறார்கள்.

இது பொறாமை, பாதுகாப் பின்மை, பயம், அகங்காரம் போன்ற எதிர்மறையான மற்றும் பேராசை போன்ற மன நிலையை ஏற்படுத்துகிறது. இந்த புத்தகம் பலர் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்ளும்போது, கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.

அத்துடன் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல், உணர்ச் சிகளை அமைதியாக வைத்துக்கொண்டு, வாழ்க் கையை திறம்பட வாழ வைப்பது போன்ற எளிய மற்றும் நடைமுறை உண்மைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

நாம் எவ் வாறு சரியான மனநி லையை உருவாக்குவது, நமக்கான புரிதல்கள் மற்றும் உணர்தல்களை நாம் அடைய வேண்டும் என் பதையும், நம் மனம், எண்ணங்கள், நம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளில் என்ன மாற்றங்களைச்
செய்ய வேண்டும், ஆழ்ந்த அமைதி மற்றும் அமை தியின் அனுபவத்தின்
மூலம் உறவுகளை எவ்வாறு வளர்த்து கொள்வது மற்றும் நமது இலக்குகளை எப்படி அடையலாம் என் பது குறித்தும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது
என்றார்.

படிக்க வேண்டும்

spot_img