கோவை ஏபிடி நிறு வனம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய பானம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏபிடி நிறுவன தலைவர் மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது,
கொரோனா வைரஸ் அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில் கோவை யின் பாரம்பரிய மிக்க நிறுவனமான ABT மிராக்கிள் எனும் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள புதிய பானத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 19 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல கட்ட ஆய்வுகளின் மூலம் இந்த பானம் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்டுள்ள செல்கள் புத்துயிர் பெறவும் செய்கிறது என்பதை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கம் கோவையில் அதிகரித்த போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இப்பானம் வழங்கப்பட் டன. இதன்மூலம் சுமார் 20000த்திற்கும் மேற்பட்டவர்கள் நோயின் தாக் கத்திலிருந்து பரிபூரணமாக குணமடைந்துள்ளனர்.
இந்த பானம் கொரோனா வைரஸ் மீதான செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட பலவேறு ஆய்வுகளின் அறிக்கைகள் இந்திய மருத்துவ இதழ்களில் வெளியா கியுள்ளன.
இவ்வாராய்ச்சிக் குறிப்பு கள் அமெரிக்காவிலுள்ள தலைசிறந்த மருத்துவ நிறுவனமான ரேடன் வெல்னஸ் க்ளினிக்கிற்கு அனுப்பப்பட்டு அந்நி றுவனம் இம்முயற்சியை பாராட்டி சான்றிதழ் வழங் கியுள்ளது.
மிராக்கிள்பானத்தினை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸிடமிருந்து பாது காக்கிறது. மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இதனை உட்கொள்ளும் போது தொற்றின் தாக்கத்திலிருந்து விரைவில் நலம் பெறுகின்றனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டோர் ஒரு நாளைக்கு 4 முதல் 6 மிராக்கிள் பாக்கெட்டுகள் எடுத்து கொள்ள பரிந்துரைக் கப்படுகிறது.
மாம்பழச் சுவையுடன் கூடிய இந்த பானம் சர்க்கரை சேர்த்தது ரூபாய் 50க்கும் மற்றும் சர்க்கரை இல்லாதது ரூபாய் 60க்கும் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
மேலும் இப்பானம் அனைத்து வயதினரும் பருக உகந்தது.
இதனை www.mirakle.life வெப்சைட் மூலமும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு அங்காடிகளில் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தின் இந்த முயற்சி கொரோனா நோயின் பரவலை பெரிதும் கட்டுப்படுத்தும் என நம்புகிறோம். மேற் கண்டவாறு அவர் கூறினார்.