fbpx
Homeபிற செய்திகள்ஐசிஐசிஐ புரூடென்ஷியல் டிஜிட்டல்மயமாக்கலில் 3 நாளில் 65 லட்சம் பாலிசிகள் வழங்கல்

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் டிஜிட்டல்மயமாக்கலில் 3 நாளில் 65 லட்சம் பாலிசிகள் வழங்கல்

டிஜிட்டல்மயமாக்கல் மூலம் மூன்றே நாட்களில் 65 லட்சம் பாலிசிகளை அளித்ததாக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2021 நிதியாண்டில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் (ICICI Prudential Life Insurance)ன் உரிமைகோரல் தீர்வு விகிதம் 97.9% ஆக இருந்தது. விசாரணை செய்யப்படாத மரண உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு இந்நிறுவனம் சராசரியாக 1.4 நாட்கள் எடுத்துக்கொண்டது.

9 மாத-நிதியாண்டு 2022 இல், இந்நிறுவனம் ரூ. 982 கோடி மதிப்புள்ள கோவிட்-19 தொடர்பான கோரிக்கைகளை தீர்த்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக தொற்றுநோய்களின்போது, உரிமைகோரல் தீர்வு செயல்முறையை விரைவாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் செய்ய, இந்த நிறுவனம், Artificial Intelligence (AI), இயந்திர வழி கற்றல், Robotic Process Automation (RPA) மற்றும் Optical Character Recognition (OCR) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

நிறுவனம் தொழில்நுட்பத்தை ஓர் ஆக்கமாக பயன்படுத்தி,பொருத்த பகுப்பாய்வை நடத்தும் நேரத்திலிருந்தே வாடிக்கையாளர்களைக் கரம் பிடித்து, விலைப்புள்ளி உருவாக்கம், கொள்முதல் பயணம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை கோரிக்கைகள் உட்பட வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை தருகிறது.

இவை மற்றும் பிற முன்முயற்சிகள் 13-வது மாத நிலைத்தன்மையை 9 மாத-நிதியாண்டு 2022 இல் 84.8 சதவீதமாக பெற நிறுவனத்திற்கு உதவியது, இது துறையில் சிறந்த ஒன்றாகும்.

அதிக நிலைத்தன்மை விகிதமானது திருப்திகரமான வாடிக்கையாளர்கள், திருப்தியான விநியோகஸ்தர்கள் மற்றும் லாபகரமான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நுகர்வோர் சேவைப்பிரிவு தலைமை அதிகாரி ஆஷிஸ் ராவ் கூறியதாவது:

வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அமைப்பாக, நாங்கள் ‘வாடிக்கையாளர் முதலில்’ என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டோம்.

கோவிட்-19 தொடர்பான அனைத்து உரிமைகோரல்களையும் உணர்திறன் மற்றும் வேகத்துடன் தீர்த்து வருகிறோம்.

WhatsApp, Mobile App, இணையதளம், Chatbot LiGo போன்ற எங்கள் டிஜிட்டல் செயலிகள், உரிமைகோரல்களை பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்குகின்றன என்றார்.

படிக்க வேண்டும்

spot_img