fbpx
Homeபிற செய்திகள்ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸில் குறைந்த நாளில் உரிமைகோரலுக்கு தீர்வு

ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸில் குறைந்த நாளில் உரிமைகோரலுக்கு தீர்வு

கடந்த 2021 நிதியாண்டில் ஐசிஐசிஐ ப்ரூடன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் (ICICI Prudential Life Insurance)ன் உரிமைகோரல் தீர்வு விகிதம் 97.9% ஆக இருந்தது.

விசாரணை செய்யப்படாத மரண உரிமைகோரல்களைத் தீர்ப்பதற்கு இந்நிறுவனம் சராசரியாக 1.4 நாட்கள் எடுத்துக்கொண்டது. 9 மாத-நிதியாண்டு 2022-ல், இந்நிறுவனம் ரூ.982 கோடி மதிப்புள்ள கோவிட் – 19 தொடர்பான கோரிக்கைகளை தீர்த்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக தொற்றுநோய்களின்போது, உரிமைகோரல் தீர்வு செயல்முறையை விரைவாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் செய்ய, இந்த நிறுவனம், Artificial Intelligence (AI), இயந்திர வழி கற்றல்,Robotic Process Automation (RPA)) மற்றும் Optical Character Recognition (OCR) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது.

RPA மற்றும் OCR போன்ற தொழில்நுட்பங்கள் எழுத்துறுதி, உரிமைகோரல் மதிப்பீடு, பாலிசி விற்பனை செய்தல் அல்லது புதுப்பித்தல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்கள், WhatsApp, Mobile App, இணையதளம், Chatbot LiGoபோன்ற டிஜிட்டல் டச்-பாயிண்ட்களின் மூலம் சேவை கோரிக்கைகளைத் தொடங்கவும் முடிக்கவும், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும், பிரீமியம் செலுத்திய சான்றி தழ்களைப் பதிவிறக்கவும் பயன்படுத்தலாம்.

நிறுவனமானது, நிறுவனத்தின் கிளைகள், அழைப்பு மையம், மின்னஞ்சல், இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு ஆகியவை கொண்ட பல சேனல் விநியோக வலையமைப்பு (Multi Chanel Distribution Network மற்றும் சேவை கட்டமைப்பை உருவாக்கி வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.

இந்நிறுவனம் 3,00,000-க்கும் மேற்பட்ட தொடுமுனைகளை (Touch Points) கொண்டு பிரீமியம் செலுத்துதல் களை புதுப்பிக்கவும் உதவுகிறது, இது நாட்டில் உள்ள பின்கோடுகளில் (Pincodes) தோராயமாக 95% உள்ளடக்கியது.

தொற்றுநோய்களின்போது வாடிக்கையாளர்கள் சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடிக்க, நிறுவனம் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டை விரைவுபடுத்தி, மெய்நிகர் முறையாக virtual mode) மாற்றி ஆயுள் காப்பீடு விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img