fbpx
Homeபிற செய்திகள்ஒதுக்கப்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போட ‘தி ஃபர்ஸ்ட் மில்லியன்’ நோய்த்தடுப்புத் திட்டம்

ஒதுக்கப்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போட ‘தி ஃபர்ஸ்ட் மில்லியன்’ நோய்த்தடுப்புத் திட்டம்

அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின் (AIF), நாடு தழுவிய நோய்த்தடுப்பு முயற்சியான, ‘தி ஃபர்ஸ்ட் மில்லியன்’ ஜூலை 2021-ல் 1 மில்லியன் (மில்லியன்) ஒதுக்கப்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கப்பட்ட திட்டம் வெற்றிகரமாக சாதனை புரிந்துள்ளது.

பாலியல் தொழிலாளர் கள், பழங்குடியின மக்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை பரா மரிப்பவர்கள், பாதிக்கப் படக்கூடிய பெண்கள் மற்றும் சிறார்களுக்கு (15-18 வயதுக்குட்பட்ட) நோய்த்தடுப்பு ஊசியை எளிதாக்குவதை மைய மாகக் கொண்டு, இந்த முயற்சி தேவை என அங்கீகரிக்கப்பட்ட 6 குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

‘தி ஃபர்ஸ்ட் மில் லியன்’ முயற்சியின் வெற்றி குறித்து, ஏஐஎப் இயக் குனர் மேத்யூ ஜோசப் கூறியதாவது: ஏஐஎப்- இன் முக்கிய நோக்கம் சமத்துவம் மற் றும் உள்ளடக்கத்தை நோக் கியதாகும். எங்களின் அனைத்து முயற்சிகளும் விளிம்புநிலை மற்றும் பலதரப்பட்ட சமூகங்களை மேம்படுத்துவதைச் சுற் றியே உள்ளன.

‘தி ஃபர்ஸ்ட் மில்லியன்’ நோய்த்தடுப்புத் திட்டம், இந்தியாவில் நோய்த்தடுப்பு மருந்து உடனடியாகக் கிடைக்காத நேரத்தில், 2021-ம் ஆண்டில், தொடங் கப்பட்டது. கோவிட் 19-ல் இருந்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவின் ஓரங்கட்டப்பட்ட பிரி வினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு தொடர்ச்சியான முயற்சியாகும்.

சமூகத்தின் ஒரு பிரி வினருக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு மருந்தை வழங்குவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது மற்றும் தேசிய அளவில் முன் னுரிமை இல்லை. எனவே மாநில அரசுகள் மற் றும் கூட்டாளிகளின் நெட் வொர்க்குடன் இணைந்து இந்த நுண்ணிய மைல் கல்லை அடைய எங்க ளுக்கு உதவியது என்றார்.

இந்தியாவின் 26 மாநிலங்களில் 2 மில்லியனுக்கும் அதிக மான (20 லட்சம்) டோஸ் களைக் கொடுக்கும் 8 மாத பிரச்சாரக் காலத் தில் பயனாளியின் ஒதுக் கப்பட்ட சமூகக் குறியீடு:

தெருவோர வியாபா ரிகள் உட்பட 6.9 லட்சம் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள், 6.8 லட்சம் பாதிக்கப்படக்கூடிய பெண்கள், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 1.9 லட்சம் பேர், 1.3 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்கள், 23971 பாலியல் தொழிலாளர்கள், 15-18 வயதுக்குட்பட்ட 2.9 லட்சம் சிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img