மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைக்க தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது சரியான தீர்ப்பு.
பழனியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் திமுகவினரும் அமைச்சர்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகின்றனர்.
இந்த செயல் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை தடுக்காவிட்டால் ஜம்மு-காஷ்மீர் போல் பிரிவினைக்கும் வாய்ப்பாக அமையும் என கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாநில முதல்வரும் அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது அவர்களின் தனி உரிமை.
இந்த மனுவை தாக்கல் செய்ததன் மூலம் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என தெரியவில்லை. மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது.
மனுவை தள்ளுபடி செய்கிறேன் என கூறியுள்ளார். எனவே ஒன்றிய அரசு என்பது சரியானதாகத்தான் தெரிகிறது.