fbpx
Homeபிற செய்திகள்ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு !

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 4750 தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் , நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் , தமிழ்நாடு அரசின் மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மேயர் அவர்களின் சீரிய முயற்சியால் கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை ( 2022 ) முன்னிட்டு , மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ .3750 / – போனஸ் தொகை வழங்கப்படும்.இதன் மூலம் 4750 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார் .

படிக்க வேண்டும்

spot_img