கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2015 ஜூலை 1ம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் 6 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
ஆத்ம நிர்பார்பாரத் திட்டத்தின் ஆணிவேராக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது.
இத்திட்டத்தால் அரசுக்கும்&மக்களுக்கும் இடையேயான தூரம் குறைந்திருக்கிறது. அரசு நிர்வாகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் முறையில் எளிதாக தீர்வு காண முடிகிறது.
கொரோனா காலத்தில் டிஜிலாக்கர் வசதியால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
பள்ளிச் சான்றிதழ்கள், மருத்துவ ஆவணங்கள் முக்கிய சான்றிதழ்களை பொதுமக்கள் டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ளனர்.
ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ் பெறுவது, மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்துவது, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளை டிஜிட்டல் முறையில் விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடிகிறது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறது.